சமூக வலைத்தளங்களை தடை செய்யும் எண்ணம் எமக்கில்லை: ஜனாதிபதி
இலங்கையில் சமூக வலைத்தளங்களை தடைசெய்யும் நோக்கம் எமக்கில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ
டுவிட்டர் இணையத்தளத்தில் இன்று குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களின் காரணமாக சில தற்கொலைச் சம்பவங்கள் அண்மையில் இடம்பெற்றன. இதனையடுத்து பல சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் வாதிகள் பலர் பேஸ்புக் உள்ளிட்ட சில சமூக வலைத்தளங்களை தடைசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும் 16 – 18 வயதுகளுக்கு இடையிலான பாடசாலை மாணவ மாணவிகள் சமூக வலைத்தளமான பேஸ்புக் இணையத்தளத்தில் ஈடுபடுவதை ஊக்குவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை விதிக்கக்கூடிய வகையில் புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தீர்மானித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எமது நாட்டில் எந்த சமூத வலைத்தளங்களும் தடை செய்யப்படாது என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

Reviewed by NEWMANNAR
on
February 25, 2014
Rating:

No comments:
Post a Comment