வாய்மையே வெல்லும் என்பதை உணர்கிறோம்: பேரறிவாளனின் தந்தை பேட்டி
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மூலம் வாய்மையே வெல்லும் என்பதை நாங்கள் உணர்கிறோம். எனினும் இது காலம் கடந்த பலன் என பேரறிவாளனின் தந்தை தெரிவித்துள்ளார்.
ராஜீவ் கொலைக் குற்ற வழக்கில் தூக்குதண்டனைக் கைதியாக இருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்து இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து பேரறிவாளன் தந்தை தா.ஞானசேகரன் குயில்தாசன் ( வயது 73) கிருஷ்ணகிரியில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்களுக்கு நீதிமன்றத்தின் மீதும் சட்டத்தின் மீதும் நம்பிக்கை இருந்தது. பெரியார் கொள்கையில் பற்று கொண்ட நாங்கள் விடுதலிப் புலிகளின் ஆதரவாளவர் ஆக இருந்ததால் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விசாரணை செய்ய வேண்டும் என கூறி அழைத்து சென்று பேரறிவாளன் பட்டரி வைத்திருந்ததாக பொய் வழக்கில் சிக்க வைத்தனர்.
தற்போது தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி என்றாலும் விரையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம்.
பேரறிவாளன் இளமை காலம் சிறையில் சென்று விட்டது. எனினும் அவருக்கு திருமணம் செய்து வைக்க நாங்கள் விரும்புகிறோம். அவர்களின் விடுதலைக்காக தமிழர்கள் போராடுவர்கள் என்று தெரிவித்தார்.
மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஊடங்கள் குற்றவாளியாகவே சித்தரித்து காட்டுகிறது. இதனால் பழி சுமத்தப்பட்டவர்கள் இந்த சமூகத்தில் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக வேண்டியுள்ளது. இந்த போக்கை ஊடங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.
வாய்மையே வெல்லும் என்பதை உணர்கிறோம்: பேரறிவாளனின் தந்தை பேட்டி
Reviewed by NEWMANNAR
on
February 18, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 18, 2014
Rating:





No comments:
Post a Comment