மன்னாரில் இன்று 8 மணிநேர மின்வெட்டு
மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணிமுதல் 8 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
பறயனாளங்குளம் தொடக்கம் முருங்கன் வரையான பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய மின் பொறியியலாளர் சபை தெரிவித்துள்ளது.
மின் இணைப்புக்களில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப் பணிகள் காரணமாகவே மின்விநியோகம் தடைப்படும் என சபை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 23 ஆம் திகதி முருங்கன் தொடக்கம் மன்னார் வரையிலான பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் எனவும் கிளிநொச்சி பிராந்திய மின் பொறியியலாளர் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
மன்னாரில் இன்று 8 மணிநேர மின்வெட்டு
Reviewed by NEWMANNAR
on
February 20, 2014
Rating:

No comments:
Post a Comment