அரச திணைக்களங்களில் துஸ்பிரயோகத்திற்குள்ளாகும் பெண்கள்: தடுத்து நிறுத்துமாறு அனந்தி கோரிக்கை
வடக்கில் உள்ள அரச திணைக்களங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பாலியல் மற்றும் அதிகார துஸ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற வடமாகாண சபையின் ஆறாவது அமர்வில் அரச திணைக்களங்களில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பாலியல் துஸ்பிரேயோகம் போன்றவற்றை கண்டித்துப் பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இக்குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் உள்ள அரச திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் என்பன காணப்படுவதாகத் தெரியவந்துள்ளது.
குறிப்பாக யாழ்.மாநகர ஆணையாளருக்கு எதிராக இத்தகைய பல பாலியல் துஸ்பிரயோகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அண்மையினில் பொதுநூலக பிரதம நூலகரினை பெண் என்ற காரணத்திற்காக மிரட்டி மற்றொரு பணியாளர் கடமை நேரத்தினில் பாலியல் படங்களை கணனியினில் பார்த்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்ய நிர்ப்பந்தித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகளுக்கு மாகாண சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் கிளிநொச்சியில் இராணுவத்தினரால் பரமாரிக்கப்படும் விவாசய பண்ணைகளில் வேலை செய்யும் பெண்கள் சிலர் விரும்ப தகாத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ அந்த நடவடிக்கைகளுக்கு தள்ளப்படுகின்றனர். எனவே அவ்விவசாய பண்ணைகளை வடமாகாண விவசாய அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைக்கிறேன் என தெரிவித்தார்.
அனந்தி சசிதரனின் பிரேரணையை வழிமொழிந்து அவைத் தலைவர் கருத்து தெரிவிக்கையில்,
வடக்கில் இவ்வாறன துஸ்பிரயோகங்கள் நடைபெறுவது தொடர்பாக பல முறைப்பாடுகள் வந்துள்ளன. இவ்வாறான நடவடிக்கைகளை இந்த உயரிய சபை பார்த்து கொண்டு இருக்காது அதுக்கு நடவடிக்கைகள் எடுக்கும் என தெரிவித்தார்.
இதனிடையே அண்மையினில் பெரும் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்களிற்கு உள்ளாகியிருக்கும் கூட்டமைப்பு சார்பு மாகாணசபை உறுப்பினர் சயந்தன் இப்பிரேரணை தனிநபர்களை குற்றஞ்சாட்டுவதாக கருத்துக்களினை முன்வைத்தார்.
அரச திணைக்களங்களில் துஸ்பிரயோகத்திற்குள்ளாகும் பெண்கள்: தடுத்து நிறுத்துமாறு அனந்தி கோரிக்கை
Reviewed by NEWMANNAR
on
February 19, 2014
Rating:

No comments:
Post a Comment