மன்னார் ஆயருக்கு ஏற்பட்ட அவதூறுக்கு வருந்துகிறோம் - மன்னார் இந்து மகா சபை
மன்னார் ஆயருக்கு எதிராக ஒரு சிலரால் துண்டு பிரசுரம் வெளியிட்டதை அடுத்து ஆயருக்கு ஏற்பட்ட அவதூறுக்கு வருந்துகிறோம் என மன்னார் இந்து மகா சபை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது .இது தொடர்பாக மேலும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
மன்னார் மாந்தை சந்தியிலிருந்து திருக்கேதீச்சரம் செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த நாவலர் உருவப்படமும் இடபக் கொடியும் தாங்கிய வளைவு 06.02.14 அன்று உடைக்கப்பட்டது.
இத் தகாத நிகழ்வு தொடர்பாக திருக்கேதீச்சர ஆலய பரிபாலன சபை இவ் விடயம் தொடர்பாக மன்னார் ஆயருடன் கலந்துரையாடியதில் ஆயர் தனது மனவருத்தத்தை தெரிவித்ததுடன் அவ் விடத்திலேயே மீள அமைப்பதற்கு தனது ஆதரவினை வழங்குவதாக தெரிவித்தார்.
இந் நிலையில் அண்மையில் வெளியிடப்பட்ட துண்டு பிரசுரமானது மன்னார் ஆயர் அவர்களுக்கு எதிராக ஒரு சிலரால் திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாகவே கருதுகின்றோம்.
அவருடைய பெயருக்கு அவதூறு ஏற்படும் வகையில் வெளியான துண்டு பிரசுரம் எமக்கும் எமது சமூகத்திற்கும் மிகுந்த வேதனை அளிக்கின்றது இவ் வாறான செயற்பாடுகள் மத நல் இணக்கத்தினை குழப்புவதற்காக ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்டதாகவே கருதுகின்றோம் .
மன்னார் ஆயருக்கு ஏற்பட்ட அவதூறுக்கு வருந்துகிறோம் - மன்னார் இந்து மகா சபை
Reviewed by NEWMANNAR
on
February 19, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment