வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகளின் நீடித்த தீர்வுக்காக ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்க அரசாங்கத்தை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்துச் சேகரிக்க நடவடிக்கை
வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகளின் நீடித்த தீர்வுக்காக ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்க அரசாங்கத்தை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்துச் சேகரிக்க வடக்கிலிருந்தது பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கான பிரஜைகள் குழு நடவடிக்கை
வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகளின் நீடித்த தீர்வுக்காக ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்க அரசாங்கத்தை வலியுறுத்தி வடமாகாண முஸ்லிம்களிடம் பத்தாயிரம் கையெழுத்துக்கள் சேகரிக்கும் நடவடிக்கை வடக்கிலிருந்தது பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கான பிரஜைகள் குழுவினால் கடந்த 02/2/2014 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அத்துடன் குறித்த ஆணைக்குழுவை நியமிக்க வலியுறுத்தி வடமாகாண முஸ்லிம்கள் சார்பாக ஐக்கிய நாடுகள் சபையில் உரை நிகழ்த்திய சிவில் சமூக செயற்பாட்டாளரும் சமூக ஆய்வாளருமான யாழ் சுகூத் பஸ்லீம் அவர்களுக்கு சிவில் சமூகம் சார்பாக வரவேற்பளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் அகில இலங்கை வை.ம்.ம்.ஏ பேரவையின் தேசியப் பொருளாளரும் நபீல் பவுண்டேஷேன் அமைப்பின் ஸ்தாபகத் தலைவருமாகிய ஜனாப் ஆ.N.ஆ. நபீல் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அத்துடன் அகில இலங்கை வை.ம்.ம்.ஏ பேரவையின் முன்னால் தேசிய தலைவர் ஜனாப் ஆ.ளு. ரஹீம் மற்றும் பிரஜைகள் குழுவின் இணைத்தலைவர் யாழவன் நசீர் பிரஜைகள் குழுவின் செயலாளர் சுகூத் பஸ்லீம் ஆகியோர் ஜனாதிபதி ஆணைக்குழுவை கோரும் மகஜரில் கையொப்பமிட்டு கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்கள்.
அவர்களுடன் பிரஜைகள் குழுவின் இதர உறுப்பினர்களான ஜனாப் ஆ.லு.ஆ. உவைஸ் ஜனாப் யு.ளு.மஹ்ரூப் யாழ் கிளிநொச்சி மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் யு.ஆ.யு. அஸீஸ் (மௌலவி) சமத்துவத்திற்கான யாழ் சிவில் அமைப்பின் உப தலைவர் ஜனாப் ஆ.ஐ.லியுசீன் மற்றும் யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மு.ஆ.நிலாம் ஆகியோரும் அதிதிகளாக கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வை சமத்துவத்திற்கான யாழ் சிவில் அமைப்பு ஏற்பாடு செய்திருந்ததுடன் நிகழ்வுக்கு அமைப்பின் தலைவர் தேசகீர்த்தி ரஹீம்கான் சுவர்கஹான் தலைமை தாங்கினார்.
வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகளின் நீடித்த தீர்வுக்காக ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்க அரசாங்கத்தை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்துச் சேகரிக்க நடவடிக்கை
Reviewed by NEWMANNAR
on
February 05, 2014
Rating:

No comments:
Post a Comment