மன்னார் பன்னவெட்டுவான் புதிய பாடசாலையில் நடைபெற்ற இல்லமெய்வல்லுனர் போட்டி-படங்கள்
மன்னாரில் புதிய பாடசாலை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பன்னவெட்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என்னும் இப் பாடசாலையின; மடு வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே. குருஸ் அவர்களால் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வைப ரீதியாக மடு வலயத்தின் 50வது புதிய பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது.
இப் புதிய பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி கடந்த மூன்றாம் திகதி இப் புதிய பாடசாலையின் வளாக விளையாட்டு மைதானத்தில் முதல் நிகழ்வாக திகதி அதிபர் ஏ.அன்ரன் லீனஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ் விளையாட்டு விழாவில் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசத்தி ஆனந்தன்இ விருந்தினராக மடு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆ.கூரோதாஸ் மாக், விருந்தினர்களாக தம்பனைக்குளம் பொலிஸ; பொறுப்பதிகாரி, மடுக் கோட்ட பாடசாலையின் அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பன்ன வெட்டுவான் கிராம சேவையாளர், கிராம அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டார்கள்.
இவ் விளையாட்டு நிகழ்வின் தலைமையுரையின் போது இப் பாடசாலையின் ஆரம்பம் முதல் இன்று வரை சகல விடயங்களிலும் உதவி நல்கிய அனைவருக்கும் நன்றி கூறியதோடு இப்பாடசாலைக்கென ஓர் கணணி தொகுதியினை சென்ற ஆண்டில் வழங்கிய வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பில் நன்றியைக் கூறிக் கொண்டதுடன் தற்போது இப்பாடசாலையின் வளர்ச்சியின் தேவைப்பாடுகளையும் முன் வைத்தார்.
அதற்கமைய இவ்விளையாட்டு நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசத்தி ஆனந்தன் அவர்கள் இப்பாடசாலையின் விளையாட்டு மைதானத்தினை சமப்படுத்தி செப்பனிடுவதுடன் மாணவர்களுக்கான பேண்ட் வாத்திய தொகுதி ஒன்றினையும் இவ்வருட தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் ஒதுக்கீடு செய்வதாகவும் கூறினார். அது மட்டுமல்லாது எதிர்வரும் ஆண்டுகளிலும் இப்பாடசாலைக்கும் இக்கிராமத்தின் தேவைகளையும் கருத்திற் கொண்டு கிராம அமைப்புக்களின் ஆலோசனையின்படி அவர்களுக்குத் தேவையானதை செய்து தருவதாகவும் வாக்குறுதி அளித்தார்.
மன்னார் பன்னவெட்டுவான் புதிய பாடசாலையில் நடைபெற்ற இல்லமெய்வல்லுனர் போட்டி-படங்கள்
Reviewed by Author
on
February 05, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment