யாழ்- தெல்லிப்பளையில் வெள்ளை நாகம்.
தெல்லிப்பளை கிழக்கு சித்தியம்புளியடியில் உள்ள தனியார் வீடொன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட
வெள்ளை நாகம் பாதுகாப்பாக ஏழாலை பெரிய தம்பிரான் ஆலயத்தில் கொண்டு செல்லப்பட்டு விடப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை மாலையில் குறிப்பிட்ட நபரின் வீட்டு முற்றத்தில் உள்ள மரத்தின் கீழ் நின்ற வேளையில் இந்த வெள்ளை நாகத்தை வீட்டுக்காரர்கள் கண்டுள்ளார்கள்.
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பதற்க்கு அமைவாக படத்துடன் காணப்பட்ட நாக பாம்மைக் கண்டதும் பெரும் பதட்டத்திற்க்கு உள்ளாகிய வீட்டுக்காரர்கள் அயலவர்களையும அழைத்ததைத் தொடர்ந்து பாம்பு விவகாரம் அந்தப் பகுதியில் பரவியது.
தொடர்ந்து அதிக எண்ணிக்கையானவர்கள் கூடிய நிலையில் பாம்பு இளைஞர்களினால் பிடிக்கப்பட்டு ஏழாலை பெரியதம்பிரான் ஆலயத்தில்கொண்டு சென்று விடப்பட்டுள்ளது.
யாழ்- தெல்லிப்பளையில் வெள்ளை நாகம்.
Reviewed by NEWMANNAR
on
February 01, 2014
Rating:

No comments:
Post a Comment