அக்கராயன்குளம் காட்டில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!
கிளிநொச்சி, அக்கராயன்குளம் காட்டுப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, இன்று சனிக்கிழமை பகல் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீதவான் விசாரணைகளை அடுத்து சடலம் அடையாளம் காண்பதற்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அக்கராயன்குளம் காட்டில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!
Reviewed by NEWMANNAR
on
February 01, 2014
Rating:

No comments:
Post a Comment