24 வருடங்களின் பின் மீண்டும் திறக்கப்பட்ட மன்னார் வாராந்த சந்தை – இரண்டாம் இணைப்பு படங்கள்
24 வருடங்களாக தின சந்தையாக இயங்கிவந்த மன்னார் நகர சபைக்கு செந்தமான வாராந்த சந்தை மீண்டும் வாரந்த சந்தையாக இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.
இன்று சனிக்கிழமை காலை 9:20 மணியளவில் மன்னார் நகர சபையின் முதல்வர் எஸ்.ஞானப்பிரகாசம் குறித்த வாராந்த சந்தையை வைபவரீதியாக திறந்து வைத்து வியாபாரிகளின் வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்தார்.
கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலை நிமித்தமாக குறித்த வாரந்த சந்தை 1990ம் ஆண்டிற்குப்பிறகு தினசந்தையாக மாற்றப்பட்டு மன்னார் மற்றும் வெளி மாவட்ட வர்த்தகர்களின் வியாபார நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.
இதன் மூலம் குறித்த வியாபாரிகள் தமது வியாபார நடவடிக்கைகளை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல குறித்த சந்தை வியாபாரிகளுக்கு சிறந்த இடமாக விளங்கியது.
இந்நிலையில் கடந்த முறை மன்னார் நகர சபை தேர்தலில் வெற்றியீட்டியபின் மன்னார் நகர சபையின் நிர்வாகம் ஒற்றுமையாக செயற்பட்டுவந்தது.
இதனை அடுத்து குறித்த சந்தையை மீண்டும் வாராந்த சந்தையாக மாற்றுவதற்கு மன்னார் நகரசபை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் அடிப்படையில் குறித்த பகுதியில் தினச்சந்தையாக இயங்கிவந்த சந்தையை வார சந்தையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளின் அடிப்படையில் குறித்த பகுதியில் இயங்கிவந்த தின சந்தை மன்னார் நகரசபையின் நிதிக்கூடாக மன்னார் சிறுவர் பூங்காவிற்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்டு வியாபாரத்திற்காக வழங்கப்பட்ட குறித்த இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது
இதனை அடுத்து நீண்ட நாட்களாக தின சந்தையாக இயங்கிவந்த குறித்த சந்தை இன்று சனிக்கிழமை முதல் வார சந்தையாக மாற்றப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து மன்னார் மாவட்ட மற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்க மன்னார் நகர சபை சிறந்த களம் அமைத்துக் கொடுத்துள்ளது.
இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட உள்ளுராட்ச்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.துரம் ,மன்னார் நகரநபையின் செயலாளர் லேனாட் பிறிட்டோ, நகரசபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ் ,மன்னார் நகர சபையின் உறுப்பினர்களான என்.நவுசின் ,எம்.பிரிந்தவனநாதன்,எஸ்.டிலான் ,மெரினஸ் பெரேரா ,நகரசபையின் ஊளியர்கள் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்
24 வருடங்களின் பின் மீண்டும் திறக்கப்பட்ட மன்னார் வாராந்த சந்தை – இரண்டாம் இணைப்பு படங்கள்
Reviewed by Author
on
February 01, 2014
Rating:

No comments:
Post a Comment