சாப்பிட்ட தட்டுகளை கழுவும் பில் கேட்ஸ்
கொஞ்சம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டாலே நம் இளைய சமுதாயத்தினர் சாப்பிட்ட கையைக் கூட கழுவாமல் கணினி முன் அமர்ந்திருக்கும் நிலையில், உலகின் பெரும் செல்வந்தரான பில் கேட்ஸ், தினமும் தான் சாப்பிட்ட தட்டுகளை தானே கழுவி வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
அவரது முதலீடுகளின் வாயிலாக ஒவ்வொரு வினாடியும் 114.16 அமெரிக்க டொலர்களை வட்டியாக ஈட்டி வரும் பில் கேட்ஸ், இணையத்தினூடாக நேற்று வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு,
தினமும் இரவில் நான் சாப்பிட்ட தட்டுகளை நானே சுத்தம் செய்து வைக்கிறேன். இது எனக்கு மன நிறைவை தருகிறது. ஒரு விஷயம் உங்களுக்கு மன நிறைவை தருகிறது, என்றால் அதை செய்யுங்கள். அது மற்றவர்கள் உங்களிடம் எதிர்பார்க்காத ஒன்றாகக் கூட இருக்கலாம்.
என்று தெரிவித்துள்ளார்.
மற்றுமொரு கேள்விக்கு,
இப்போதும், தெருவில் 100 டொலர் தாள் கிடந்தால் அதை குனிந்து எடுக்க ஒரு நிமிஷம் கூட நான் தயங்க மாட்டேன். இதற்காக எனது நேரம் செலவாவதை பற்றி கவலைப்பட மாட்டேன்.
எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சாப்பிட்ட தட்டுகளை கழுவும் பில் கேட்ஸ்
Reviewed by NEWMANNAR
on
February 11, 2014
Rating:

No comments:
Post a Comment