அண்மைய செய்திகள்

recent
-

இனப்பிரச்சினைத் தீர்விற்கு முன்றாம் தரப்பினரின் ஒத்துழைப்பு அவசியம்: ஐ.நா.விடம் வடக்கு முதலமைச்சர்

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வற்கு முன்றாம் தரப்பின் உதவி அவசியமென ஐ.நா.விடம் வலியுறுத்தியுள்ள வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், இந்த உதவியில்லாமல் எதனையும் எதிர்பார்க்க முடியாதென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை விஐயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ முனின் உதவியாளர் தலைமையிலான குழுவினர், வடக்கு முதலமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

யாழிற்கு விஐயம் செய்த ஐநா குழுவினர் இன்று வடக்கு ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் என்னையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இதன் போது வடக்கு மாகாண சபையுடன் இணைந்து செயற்படுவதற்கு ஆளுநர் விருப்பம் தெரிவித்துள்ளதாக ஐநா குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதன் போது மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்கள், இதற்கு ஐநாவின் பங்களிப்பு தொடர்பாகவும் இங்குள்ள நிலைமைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராய்வதுடன் எங்களுக்கு உதவி செய்வது தொடர்பிலுமே அதிக கவனம் செலுத்தியிருந்தனர்.

எமது மக்களுக்கு அபிவிருத்திகள் தேவை தான் ஆனால் அதனை விடவும் மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க வேண்டும். மேலும் இங்கு போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் விடயத்தில் அதிக அக்கறை செலுத்தி அவர்களுடைய வாழ்வை வளப்படுத்த வேண்டுமென்றார்.

இந்தவிடயத்தில் நாங்கள் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்ற அதே வேளையில், அரசாங்கம் எந்தவித அக்கறையும் இன்றி தான்தோன்றித்தனமாகவே செயற்பட்டு வருகின்றது. அவ்வாறு தான் செயற்பட்டு வருகின்ற அதே வேளையில், அதற்குள் எங்களையும் இழுப்பதறங்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இனப்பிரச்சினைத் தீர்விற்கு முன்றாம் தரப்பினரின் ஒத்துழைப்பு அவசியம்: ஐ.நா.விடம் வடக்கு முதலமைச்சர் Reviewed by NEWMANNAR on February 11, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.