மன்னார் புதைகுழியிலிருந்து இன்றும் ஒரு எலும்புக்கூடு மீட்பு: 62 ஆக அதிகரிப்பு!
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி 23 ஆவது தடவையாக இன்று வியாழக்கிழமை தோண்டப்பட்ட போது மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் அனுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ன தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணிமுதல் மதியம் 2.30 மணிவரை குறித்த மனித புதைகுழி தோண்டப்பட்டது.
இதன்போதே மேலும் ஒரு மனித எலும்புக்கூடு உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்களின் தொகை 62ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 4 மனித எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்கள் இன்று மீட்கப்பட்டு பெட்டிகளில் பொதி செய்யப்பட்டடு மன்னார் நீதிவானின் உத்தரவிற்கமைவாக மன்னார் பொது வைத்தியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இது வரை மீட்கப்பட்டுள்ள 62 மனித எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்களில் 39 மனித எலும்புக்கூடுகள் பொதி செய்யப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை 17ம் திகதி 24 வது தடவையாக குறித்த மனித புதைகுழி மன்னார் நீதிவான் முன்னிலையில் தோண்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் புதைகுழியிலிருந்து இன்றும் ஒரு எலும்புக்கூடு மீட்பு: 62 ஆக அதிகரிப்பு!
Reviewed by NEWMANNAR
on
February 13, 2014
Rating:
No comments:
Post a Comment