மன்னாரில் மக்களின் பாவனைக்கு பொருத்த மற்ற உணவுப் பொருட்கள் விற்பனை நிலையங்களில் இருந்து அகற்றப்பட்டது
சுகாதார அமைச்சும் , சுகாதார திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள தேசிய
உணவு வாரத்தை முன்னிட்டு மன்னார் பொது சுகாதார பரிதோசகர் குழுவினர் நேற்று புதன் கிழமை மதியம் மன்னார் பஸார் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனையினை மேற்கொண்ட போது பல வர்த்தக நிலையங்களில் இருந்து பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி எஸ் . என் . கில்றோய் பீரிஸ் தெரிவித்தார் .
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி எஸ் என் கில்றோய் பீரிஸ் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் குழு நேற்று புதன் கிழமை மதியம் மன்னார் பஸார் பகுதிகளில் உள்ள உணவகங்கள் , மொத்த விற்பனை நிலையங்கள் , சில்லரை விற்பனை நிலையங்கள் போன்றவற்றில் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர் .
இதன் போது மனித பாவனைக்கு உதவாத , கலாவதியான உணவுப்பபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது .
குறிப்பாக போத்தலில் அடைக்கப்பட்ட தேங்காய் எண்ணை , நெத்தலிக்கருவாடு , சோயா மீற் பக்கட் , நூடுல்ஸ் , மீன்ரின் உற்பட பல்வேறு உணவுப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது .
இவ்வாறு மீட்கப்பட்ட கடை உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டதோடு கைப்பற்றப்பட்ட பொருட்களை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது .
இவ்வாறான பரிசோதனைகள் தீடீர் , திடீர் என மேற்கொள்ளப்படும் எனவும் , இதன் போது மனித பாவனைககு உதவாத பொருட்கள் வைக்கப்பட்டிருந்தால் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி எஸ் என் கில்றோய் பீரிஸ் மேலும் தெரிவித்தார் . . .
மன்னாரில் மக்களின் பாவனைக்கு பொருத்த மற்ற உணவுப் பொருட்கள் விற்பனை நிலையங்களில் இருந்து அகற்றப்பட்டது
Reviewed by NEWMANNAR
on
February 06, 2014
Rating:

No comments:
Post a Comment