அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகர சபையின் அபிவிருத்தி பணிகளும் மக்களின் எதிர் பார்ப்பும்

தேர்தல் ஒன்றின் மூலம் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி அமைப்பின் ஓரங்கமான மன்னார் நகரசபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றுவதற்கு உழைத்த  அனைத்து தமிழ் மக்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம். 

மூன்று வருடங்களுக்கு முன் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட இந்த நகர சபை நகர மக்களுக்கு பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது. அந்த வகையில் எமது நகர சபையானது பல நிறுவனங்களின் உதவியுடன் சில வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளமை பாராட்ட படவேண்டிய விடயமே உதாரணமாக சிறுவர் பூங்கா புனரமைக்கப்பட்டமை வாராந்த சந்தையை மீண்டும் ஆரம்பித்துள்ளமை தனியார் போக்குவரத்து தரிப்பிடத்தை புனரமைத்துள்ளமையும் மலசலகூடத்தினை அமைத்துள்ளமையும் என்பன மிகவும் முக்கியம் வாய்ந்த விடயங்களே இதற்கு எமது நகர மக்கள் சார்பாக நகரசபை நிர்வாகத்துக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.

இருப்பினும் எமது நகர சபை பல்வேறு விடயங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதும் வாக்களித்த மக்களின் விருப்பமாகும் அந்த வகையிலே இன்னும் பெரும்பாலான கிராமங்களுக்கு வீதி விளக்குகள் பொருத்தபட வேண்டும் பல கிராமங்களின் உள்ளக வீதிகள் புனரமைக்கப்பட வேண்டும் மிகவும் இடையூறு விளைவித்துக் கொண்டிருக்கும் கட்டாக்காலி விலங்குகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மிகமுக்கியமான கிராமங்களின் வடிகாலமைப்பு சீர்செய்யப்பட வேண்டும். நகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் மற்றும் இவையனைத்தையும் மேற்கொள்வதற்குரிய உப குழுக்களை அமைக்க வேண்டும் இவைகள் நகர சபையால் மேற்கொள்ள வேண்டிய மிக முக்கிய விடயங்களாகும்.

மக்களின் எதிர்பார்ப்புக்களில் நாம் கூறிய சிலவற்றையாவது செய்வதனூடாக எமது நகரினையும் நகர சபையினையும் அபிருத்தி செய்யலாம் என்பது எமது தாழ்மையான  வேண்டுதல்.

மைக்கல் கொலின் 
மன்னார் நகர சபையின் அபிவிருத்தி பணிகளும் மக்களின் எதிர் பார்ப்பும் Reviewed by NEWMANNAR on February 06, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.