மணமகனுக்கு தாலி கட்டிய மணமகள்
தங்கள் மகளின் திருமண நிகழ்வின் மூலம் ஆணுக்குப் பெண் சமம் என்பதை செயலில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளர் தம்பதியர்.
சமூகத்தைத் தலைகீழாக மாற்ற வேண்டும் என புரட்சிகர மாற்றங்களை முன்மொழியும் பலரும்கூட பேச்சோடு நின்றுவிடும் நிலையில், இவற்றையெல்லாம் பற்றி இவர்கள் என்ன பெரிதாக நினைத்துவிடப் போகிறார்கள் என ஏளனமாகப் பார்க்கப்படும் தொழிலாளர்கள் இந்த புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
வசந்தி, சதீஷ் ஆகிய துப்புரவுத் தொழிலாளர்களுக்கு இடையில் நீடாமங்கலத்தில் ஞாயிறு திருமணம் நடைபெற்றது.
மணமக்கள் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர், வழமைபோல் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். இதையடுத்து மணமகன் கழுத்தில் மணமகள் வசந்தியும் தாலி கட்டினார்.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றோர், வழக்கத்துக்கு மாறாக நடைபெற்ற இந்த நிகழ்வைக் கண்டு அதிர்ந்துபோயினர். ஆணும் பெண்ணும் சமம் என்பதை விளக்கும் நோக்கில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டதாக குடும்பத்தினர் விளக்கிய பின்னரே, நடந்ததை உணர்ந்த பார்வையாளர்கள் அந்தக் குடும்பத்தினரைப் பாராட்டி வியந்தனர்.
மணமகனுக்கு தாலி கட்டிய மணமகள்
Reviewed by NEWMANNAR
on
February 11, 2014
Rating:

No comments:
Post a Comment