சமாதானத்திற்கும் மீள் இணக்கத்திற்குமான வழங்கள் ஆர்.பி.ஆர் அமைப்பின் மாவட்ட வலைப்பின்னல் நிகழ்வு. படங்கள்
மன்னார் சமாதானத்திற்கும் மீள் இணக்கத்திற்குமான வளங்கள் ( ஆர்.பி. ஆர் ) அமைப்பின் மாவட்டவலைப்பின்னல் நிகழ்வு இன்று காலை 10:30 மணியளவில் அவ் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி எம் . எம் . சபுறுதீன் தலைமையில் மன்னார் சித்திவிநாயகர் இந்து பாடசாலையில் இடம் பெற்றது .
இவ் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட உதவிச்செயலாளர் எம் . பரமதாசன் கலந்து கொண்டார் .
இதேவேளை சர்வமதத்தலைவர்கள்,ஆர்.பி.ஆர்.அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட பலர் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர் .
இதன் போது மன்னார் மாவட்ட சமாதானத்திற்கும் மீள் இணக்கத்திற்குமான வளங்கள் ( ஆர்.பி. ஆர் ) அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பிலும் , கிராமப்புரங்களில் அவர்கள் முன்னெடுக்கும் நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பாகவும் தெளிவு படுத்தப்பட்டது . இதனைத்தொடர்ந்து விழிப்புணர்வு நாடகம் இடம் பெற்றது .
சமாதானத்திற்கும் மீள் இணக்கத்திற்குமான வழங்கள் ஆர்.பி.ஆர் அமைப்பின் மாவட்ட வலைப்பின்னல் நிகழ்வு. படங்கள்
Reviewed by NEWMANNAR
on
February 01, 2014
Rating:
No comments:
Post a Comment