அண்மைய செய்திகள்

recent
-

ஒருங்கிணைந்த மக்கள் பங்களிப்புடன் அபிவித்தித்திட்டம் மன்னார் நகர சபையினால் முன்னேடுப்பு

உள்ளுராட்ச்சி அமைச்சின் வேலைத்திட்டத்திற்கு அமைவாக கிராமிய மட்டத்தில் ஒருங்கினைந்து மக்கள் பங்கேற்கும் வகையிலான அபிவிருத்தி திட்டம் ஒன்று மன்னாரில் நகர சபையினால் முன்னேடுக்கப்பட்டு வருவதாக மன்னார் நகரசபையின் உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்

மன்னார் நகர சபை தனது நகர சபைக்குட்ப்பட்ட பகுதியில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளது இதற்கமைவாக  அவுஸ்திரேலிய நாட்டின் நிதியினை பெறுவதற்காக மக்கள் சந்திப்புக்களை எற்ப்படுத்தி கிராமங்கள் தோறும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பது மற்றும் கிராமங்களை அபிவிருத்தி செய்வது உள்ளிட்ட  பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் மக்களின் தேவைகளை இனம் கண்டு அதனை அடையாளப்படுத்தி மக்;களின் ஆதரவோடு மக்களை தயார்படுத்தி அதனுடாக பெறப்படும் நிதியினை பயன்படுத்தி மன்னார் நகர சபைக்குட்ப்பட்ட பகுதியில் உள்ள கிராமங்களில் அபிவிருத்தியினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்
அவர் தொடர்ந்து மேலும் தெரிவிக்கையில்

குறிப்பாக மன்னார் நகர சபைக்குட்பட்ட பகுதியில் 15 கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகின்றது இவ் வேலைத்திட்டத்திற்கு அமைவாக மூன்று பிரிவுகளாக குறித்த கிராம சேவகர்பிரிவு பிரிக்கப்பட்டு அதாவது ஓரு பிரிவுக்குள் ஜந்து கிராமசேவகர் பிரிவுகள் இணைக்கப்பட்டு குறித்த மூன்று பிரிவுகளுக்கும் நகரசபையின் உறுப்பினர்கள் இருவர் வீதம் நியமிக்கப்பட்டு தொழிநுட்;ப உத்தியோகஸ்தரின் மேற்ப்பார்வையில்  மக்கள் சந்திப்பை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டள்ளது.

இதன்படி முதலாவது சந்திப்பு மன்னார் ,கீரி,பட்டித்தோட்டம் ஆகிய கிரமசேவகர்பிரிவுகளில் மன்னார் நகர சபை உறுப்பினர் இரட்ண சிங்கம் குமரேஸ் மற்றும் செல்வக்குமரன் டிலான் தலைமையிலும் மற்றும் சாவற்காடு கிராம சேவகர் பிரிவில் மன்னார் நகர சபையின் உபதலைவர் ஜேம்ஸ் அவர்களின் தலைமையில் ஒரு சந்திப்பும் , மூர்வீதி கிராம சேவகர் பிரிவில் நகர சபை உறுப்பினர் நவுசின் தலைமையில் ஓரு சந்திப்பும் நேற்று 17ம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பின் பொது மக்களை சந்தித்த மன்னார் நகர சபையின் உறுப்பினர்கள் குறித்த கிராமங்களின் தேவைகள் செய்யப்படவேண்டிய அத்திpயாவசிய தேவைகள் மற்றும் செய்யப்படவேண்டிய அபிவிருத்திகள் தொடர்பில் மக்களிடம் உரையாடி தரவுகளை பதிவு செய்து கொண்டனர்.
குறித்த சந்திப்புக்கள் நடைபெற்ற இடத்திற்கு மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானபிரகாசம் மற்றும் அதன் செயலாளர் பிரிட்டோ ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

குறித்த தரவுகள் திரட்டும் வேலைத்திட்டம் நேற்று 17ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து ஜந்து நாட்கள் நடைபெறவுள்ளது
குறிப்பாக குறித்த ஒவ்வோரு கிராம சேவகர் பிரிவிலும் ஏழு (7) பேர் கொண்ட குழு ஒன்று அமைக்ப்பட்டு அதன் மூலம் இத்திட்டத்;தை விரிவு படுத்த மன்னார் நகர சபை திட்டமிட்டுள்ளது என தெரிவித்தார்.












ஒருங்கிணைந்த மக்கள் பங்களிப்புடன் அபிவித்தித்திட்டம் மன்னார் நகர சபையினால் முன்னேடுப்பு Reviewed by Author on February 18, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.