திருக்கேதீஸ்வரத்தில் மேலும் இரண்டு எலும்புக்கூடு கண்டுபிடிப்பு இன்றுடன் 63 ஆக அதிகரிப்பு -படங்கள்
திருக்கேதீஸ்வரத்தில் மனித எச்சங்களை தேடும்பணி இன்று திங்கள்கிழமை 17.02.2014 நடைபெற்றது.இதன்போது புதிதாக இரண்டு மண்டை ஓடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து எலும்புகூடுகளின் எண்ணிக்கை அறுபத்து மூன்றாக (63) உயர்ந்துள்ளன.
மன்னார் திருக்கேதீஸ்வரப் பகுதியில் மேற்கொள்ளப் பட்டுவரும் மனித புதைகுழி அகழ்வுப் பணி இன்று திங்கள்கிழமை இருபத்தி நான்காவது (24) தடவையாக நடைப்பெற்றது.
மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வி ஆனந்தி கனகரெட்ணம் முன்நிலையில்; சட்டவைத்திய நிபுணர் டி.எல். வைத்தியரெட்ண தலைமையிலான குழுவின் பங்குபற்றுதலுடன் இன்று திங்கள்கிழமை குறித்த புதை குழியில் மனித எச்சங்களை தேடும் பணியின்போதே மேலும் இரண்டு மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதேவேளை இன்று ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் இரண்டு புதை குழியிலிருந்து துப்பரவு செய்யப்பட்டு இலக்கமிடப்பட்டு பெட்டியில் பொதி செய்யப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த வியாழக்கிழமை வரை (13.02.2014) 40 எலும்புக்கூடுகள் பொதி செய்யப்பட்ட பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று இரண்டு எலும்புக்கூடுகள் பொதி செய்யப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டதை அடுத்து புதை குழியிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய மனித எச்சங்களை நோக்கிய மண் அகழ்வுப் பணியின்போது தடயப்பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது நணயவடிவிலுள்ள குறித்த தடயப்பொருள் நாணயமா அல்லது தாயத்து (பென்டன்) னா அல்லது வேறு பொருளா என கணிப்பிட முடியாத நிலையில் உருக்குலைந்து காணப்பட்டது
இன்நிலையில் குறித்த தடயப்பொருளை மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வி ஆனந்தி கனகரெட்ணம் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரிடம் குறித்த தடயப்பொருளை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
இதனை அடுத்து குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் குறித்த தடயப் பொருளை நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளனர்.
இதேவேளை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடு ஒன்றை புதை குழியிலிருந்து மீட்டு பொதி செய்ய பாதுகாப்பான இடத்திற்கு அனுப்புவதற்கு குறித்த எலும்புக்கூட்டை அகழ்வு செய்தபோது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் குறித்த எலும்புக்கூடு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது
இதேவேளை நாளை செவ்வாய்க்கிழமை மீண்டும் மனித எச்சங்கனை நோக்கிய அகழ்வு பணி நடைபெறவுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20 ந் திகதி திருக்கேதீஸ்வரம் கோவில் மாந்தை வீதிக்கு அருகாமையில் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் நிலத்தடியில் குழாய்கள் பதிக்கும் வேலையில் ஈடுபட்டபோது இவ் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேரில் சென்று பார்வையிட்ட மன்னார் மாவட்ட நீதிபதி ஆனந்தி கனகரட்ணம் அனுராதபுரத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சட்ட வைத்திய நிபுணர் டீ.எல்.வைத்தியரத்தினவுடன் கலந்து ஆலோசிக்கப்பட்ட பின் கடந்த டிசம்பர் மாதம் 23 ந் திகதியிலிருந்து இவ் மனித புதைகுழியை அகழ்வு செய்யும்படி மன்னார் நீதிபதி உத்தரவpட்டிருந்தார்.
குறித்த தினத்திலிருந்து மனித எச்சங்களை தேடும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது
குறித்த தினத்திலிருந்து மனித எச்சங்களை தேடும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது
திருக்கேதீஸ்வரத்தில் மேலும் இரண்டு எலும்புக்கூடு கண்டுபிடிப்பு இன்றுடன் 63 ஆக அதிகரிப்பு -படங்கள்
Reviewed by Author
on
February 17, 2014
Rating:

No comments:
Post a Comment