அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையை தனிமைப்படுத்த வேண்டாம் - அவுஸ்திரேலியா கோரிக்கை

இலங்கையில் சமாதானம், பொருளாதாரம் அபிவிருத்தி என்பவற்றை ஏற்படுத்த முழு அளவில் ஆதரவு வழங்கப்படும் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. 

இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள அவுஸ்திரேலியா விரும்புவதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப் தெரிவித்துள்ளார். 

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இலங்கையின் 66வது சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கிடையில் விளையாட்டு, வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கல்வி போன்ற பல்வேறு துறைகளில் வரலாற்று ரீதியான உறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் வாழும் ஒவ்வொருவரினது வாழ்க்கையையும் மேம்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாகவும் ஜூலி பிஷொப் கூறினார். 

இதேவேளை கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

இலங்கையை தனிமைப்படுத்த வேண்டாம் என சர்வதேச சமூகத்திடம் ஜூலி பிஷொப் கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்தத் தருணத்தில் இலங்கையை தனிமைப்படுத்துவது பொருத்தமான விடயம் அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளது. 

இலங்கையில் மீள் குடியேற்றப்பணிகள் இடம்பெற்று வருவதாகவும், அதனை சர்வதேசம் அங்கீகரிக்க வேண்டும் எனவும் ஜூலி பிஷொப் கோரிக்கை விடுத்துள்ளார். 
இலங்கையை தனிமைப்படுத்த வேண்டாம் - அவுஸ்திரேலியா கோரிக்கை Reviewed by Author on February 17, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.