அண்மைய செய்திகள்

recent
-

வட மாகாண முதல்வருக்கும் மன்னார் மீனவ பிரதிநிதிகளுக்குமிடையில் விசேட சந்திப்பு -படங்கள்

வட மாகாண முதல்வரை மன்னார் மீனவர்கள் கடந்த 17 ம் திகதி சந்தித்து ரோளர் மீன்பிடித் தொழில் நிறுத்தப்பட்டுள்ளதால் மன்னார் மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
இதற்கான மாற்று தீர்வு ஒன்றை பெற்றுத்தரும்படி பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர் மீனவர்களின் கோரிக்கைகளை கவனத்தில் எடுத்துக்கொண்ட வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து நல்ல தீர்வு ஒன்றை பெற்று தருவதாக தெரிவித்துள்ளார்
குறித்த சந்திப்பின் போது வட மாகாணசபை உறுப்பினர்களான பிறிமுஸ் சிராய்வா மற்றும் ஞானசீலன் குணசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்
குறித்த வியம் தொடர்பாக தெரியவருவது
மன்னாரில் ரோளர் விசைப்படகுகள் மூலம்  செய்யப்படும் மீன்பிடி தொழிலை கைவிடுமாறு மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரிய மன்னார் ரோளர் விசைப்படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு தெரிவித்துள்ளார்.
கடந்த 13ம் திகதி மன்னார் மாவட்ட செயலகத்தில்  ரோளர் விசைப்படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுடனான சந்திப்பொன்று நடைபெற்றிருந்தது.
குறித்த சந்திப்பில் பேசாலை மற்றும் பள்ளிமுனையை சேர்ந்த ரோளர் விசைப்படகு மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள்  கலந்துகொண்டனர்.
 குறித்த சந்திப்பின்போது மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரிய இந்;திய மீனவர்கள் விசைப்படகுகளின் மூலம் மீன்பிடிப்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களும் விசைப்படகு மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதை நிறுத்துமாறு தெரிவித்துள்ளார்;.
இந்நிலையில் குறித்த மீனவர்கள் விசைப்படகு தொழிலுக்கு பதிலாக மாற்று தொழில் முறை ஓன்றை தமக்கு தரும்படி கோரிக்கையினை முன்வைத்ததோடு குறிப்பாக நீர்கொழும்பு,சிலாபம்,புத்தளம்,கெந்தல போன்ற பகுதிகளில் குறித்த ரோளர் இழுவை விசைப்படகு மூலம் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும் போது ஏன் மன்னாரிலுள்ள மீனவர்கள் ரோளர் மீன்பிடி தொழிலில் ஈடுபடமுடியாது என கேள்வி எழுப்பியிருந்தனர்.
ஏற்கனவே நாறா நிறுவனம் குறித்த விடயம் தொடர்பாக கடற்பரப்பில் இதற்கான இடம் ஒன்று வழங்குவதாக கூறப்பட்டிருந்தபோதும் இதுவரை  அது வழங்கப்படவில்லை என மீனவவர்கள் மன்னார் மாவட்ட செயலாளரின் கவனத்திற்கு கொண்டவந்திருந்தனர்
இந்னிலையிலேயே குறித்த விடம் தொடர்பாக வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் கவனத்திற்கு மன்னார் மீனவர்கள் கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது





வட மாகாண முதல்வருக்கும் மன்னார் மீனவ பிரதிநிதிகளுக்குமிடையில் விசேட சந்திப்பு -படங்கள் Reviewed by Author on February 22, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.