அண்மைய செய்திகள்

recent
-

வட மாகாணத்தில் மழை இல்லாத காரணத்தால் 58 வீதமான நெல் செய்கை அழிவு.

வடக்கு மாகாணத்தில் இந்த வருடம் மழை இல்லாத காரணத்தால் விவசாயிகள் 58
வீதமான நெல் அழிவைச் சந்தித்துள்ளனர் என்று வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் . சி . சிவகுமார் தெரிவித்தார் .

நெல் உற்பத்தியில் 42 வீதமான நெல் விளைச்சலே கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது . :

வடக்கு மாகாணத்தில் நெற்செய்கைக்காக 99 ஆயிரத்து 60 ஹெக்ரேயர் நிலப்பரப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது .

2013-2014 ஆம் ஆண்டுக்கான காலபோகத்தில் 91 ஆயிரத்து 540 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் நெல் உற்பத்தி மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டபோதும் 64 ஆயிரத்து 484 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் நெல் விதைக்கப்பட்டுள்ளது .

இந்த நிலையில் 325 ஆயிரத்து 710 மெற்றிக் தொன் விளைச்சல் எதிர்பார்க்கப்பட்ட போதும் போதியளவு மழை வீழ்ச்சி கிடைக்கப்பெறாத காரணத்தால் 138 ஆயிரத்து 16 மெற்றிக் தொன் விளைச்சலே கிடைக்கப்பெறும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது என்றார் .
வட மாகாணத்தில் மழை இல்லாத காரணத்தால் 58 வீதமான நெல் செய்கை அழிவு. Reviewed by NEWMANNAR on February 21, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.