திருக்கேதீஸ்வரத்தில் ஆத்ம சாந்தி பிராத்தனை-படங்கள்
மன்னார் திருக்கேதிஸ்வரம் பாலாவிதீர்த்த கரையில் ஏகாதச (11) ருத்ர ஹோமமும் ஆத்ம சாந்தி பிராத்தினையும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச்சபை தலைமையில் நடைபெற்றது
புனித பூமியாகிய திருக்கேதீஸ்வரத்தில் புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ள மக்களின் ஆத்ம சாந்திக்காகவும் திருக்கேதீஸ்வர புனித பூமியின் புனிதத்தை காத்திடவும் குறித்த ஆத்ம சாந்தி பூஜை நடைபெற்றது.
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில்; மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து குறித்த பகுதியில் தொடர்ந்து மனித எலும்புக்கூடுகள் மீட்க்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு குறித்த புதைகுழியிலிருந்து பெருமளவிலான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுவருவதை அடுத்து குறித்த பூஜையினை ஆலய திருப்பணிச்சபை ஏற்ப்பாடு செய்ய்திருந்தது.
குறித்த புதை குழியில் புதைக்கப்பட்டுள்ள மக்களின் ஆத்மா சாந்திக்காக விசேட பிரார்த்தனை ஒன்று திருக்கேதீஸ்வரம் ஆலய திருப்பணிசபை ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8:30மணியளவில் நடைபெற்றது.
இதன்போது நூற்றுக்கணக்காக மக்கள் குறித்த ஆத்ம சாந்தி பிரார்த்தனையில் பங்குபற்றி புதைக்கப்பட்டுள்ள தமது உறவுகளுக்காகவும் அவர்களின் ஆத்ம சாந்திக்காகவும் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதன்போது வழிபாடுகளில் வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சஜந்தன்,மன்னார் பிரஜைகள்குழுவின் உப தலைவர் சாகாயம்,சமூக சேவை ஆர்வலர் சாள்ஸ் நிமலநாதன் உட்பட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருக்கேதீஸ்வரத்தில் ஆத்ம சாந்தி பிராத்தனை-படங்கள்
Reviewed by Author
on
February 23, 2014
Rating:

No comments:
Post a Comment