நாங்க இருக்கோம் : ஜெயலலிதாவின் முடிவுக்கு தமிழ்த்திரையுலகம் ஆதரவு
”ஜெயலலிதாவின் முடிவால் இனி தமிழன் தலை நிமிர்ந்து நிற்பான்” என்று டைரக்டர் பாரதிராஜா கூறினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேருக்கும் தூக்குத்தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. மேலும் கோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில் அவர்கள் 3 பேர் மட்டுமின்றி இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்பட மேலும் 4 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக முதலமைமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார்.
ஆனால், மத்திய அரசின் அவசரமான எதிர் நடவடிக்கை காரணமாக, அவர்களுடைய விடுதலை தாமதமாகி வருகிறது. இந்த நிலையில், ஜெயலலிதாவின் விடுதலை நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் திரையுலகம் சார்பில், சென்னையில் டைரக்டர் பாரதிராஜா தலைமையில் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், டைரக்டர் பாரதிராஜா பேசியதாவது :
உலக நாடுகள் அனைத்தும் தூக்குத் தண்டனையை எதிர்க்கும் சூழ்நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சதாசிவம் மிகச் சரியான தீர்ப்பை சொல்லி இருக்கிறார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வது மாநில அரசின் முடிவு என்று அவர் தீர்ப்பு கூறியதும் முதலமைச்சர் ஜெயலலிதா தாய்மை உணர்வுடன் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேர் உள்பட சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
இதற்காக உலக தமிழர்கள் அத்தனை பேரும், கண்ணீரால் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மறப்பதும், மன்னிப்பதும் மனித மாண்பு. முதல் முறையாக தமிழன் தலை நிமிர்ந்து நிற்பதற்கான ஒரு முடிவை முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்திருக்கிறார். இதற்காக ஒட்டு மொத்த தமிழர்களும் அவருக்கு உறுதுணையாக நிற்பார்கள்.
நாங்க இருக்கோம் : ஜெயலலிதாவின் முடிவுக்கு தமிழ்த்திரையுலகம் ஆதரவு
Reviewed by NEWMANNAR
on
February 23, 2014
Rating:

No comments:
Post a Comment