அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் – வவுனியா மாவட்டங்களுக்கிடையிலான ‘மொழிமுனை போட்டி 2014′

இலங்கைத் தமிழ் விவாதிகள் கழகம் அகில இலங்கை ரீதியில் பாடசாலைக்களுக்கிடையில் நடாத்துகின்ற விவாதப் போட்டி ´மொழிமுனை 2014´ இன் வவுனியா மற்றும் மன்னார் மாவாட்டங்களுக்கான போட்டிகளை அவர்கள் சார்பாக நாடாத்துகின்ற பொறுப்பு, தமிழ் மாமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அதற்கிணங்க 22.02.2014 சனிக்கிழமை மன்னார் மாவட்டத்திலும், 23.02.2014 ஞாயிற்றுக்கிழமை வவுனியா மாவட்டத்திலும் தமிழ் மாமன்றம் போட்டிகளை ஒழுங்கு செய்து நடாத்தியது.
கடந்த வருட நடுப்பகுதியில் கலை இலக்கிய இளம் ஆர்வலர்களை ஒன்றிணைத்து ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மாமன்றம் வவுனியா மாவட்டத்தில் கலை இலக்கிய ரீதியிலான தொடர்ச்சியான பணிகளை சிறப்பாக செய்து வருகின்றது.
அந்த வகையில் தமிழ் மாமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்ட பணியை மன்னார், வவுனியா ஆகிய இரு மாவட்டங்களிலும் சிறப்பாக செய்து, இரு மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி, தேசிய மட்டத்தில் இடம் பெறுகின்ற இறுதிப்போட்டியில் பங்கேற்கின்ற பாடசாலை அணிகளை தெரிவு தெரிவு செய்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் முதன்முறையாக தமிழ் மாமன்றம் தனது காலடியை 22.02.2014 அன்று பதித்திருந்தது. மன்னார் மாவட்டதில் போட்டிகளுக்காக தமிழ் மாமன்றதினருக்கு முழுமையான ஆதரவும் உற்சாகமும் சிறப்பாக அளிக்கப்பட்டது.
அதற்கிணங்க நாடாத்தப்பட்ட போட்டிக்கு வருகை தந்த அணிகளிலிருந்து 4 பாடசாலைகள் அரை இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டன. அரை இறுதிப் போட்டியில் மோதிக்கொண்ட,
ம/உயிலங்குளம் றோ.க.த.பா எதிர் ம/சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி போட்டியில் வெற்றி பெற்று ம/சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியும் , ம/புனித சேவியர் ஆண்கள் கல்லூரி, எதிர் ம/ புனித சேவியர் பெண்கள் கல்லூரி போட்டியில் வெற்றி பெற்று ம/புனித சேவியர் ஆண்கள் கல்லூரியும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகின.
இவ்விரு அணிகளுக்குமிடையில் இடம் பெற்ற இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று மன்னார் மாவட்டம் சார்பாக தேசிய மட்ட போட்டிக்கு ம/சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி தெரிவாகியது.
வவுனியா மாவட்டத்தில் 23.02.2014 அன்று இடம் பெற்ற போட்டியில்,போட்டியிட்ட அணிகளிலிருந்து, அரை இறுதிப்போட்டிக்கு 4 அணிகள் தெரிவுசெய்யப்பட்டன.
அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று போட்டியிட்ட, வ/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் எதிர் இலங்கைத் திருச்சபை தமிழ் மத்திய மகா வித்தியாலயம் போட்டியில், வ/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் அணியும், புதுக்குளம் மகா வித்தியாலயம் எதிர் வவுனியா இந்துக்கல்லூரி போட்டியில் வெற்றி பெற்று புதுக்குளம் மகா வித்தியாலயம் அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.
இவ்விரு அணிகளிக்குமிடையில் இடம் பெற்ற ஆரோக்கியமானதும், மிகுந்த போட்டித் தன்மை மிகுந்ததுமான போட்டியிலிருந்து வ/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் அணி வெற்றி பெற்று, வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மட்ட போட்டியில் போட்டியிடும் அணியாக தகுதி பெற்றது.
இரு மாவட்டங்களிலும் இடம் பெற்ற போட்டிகளிலும் கலந்து கொண்ட அத்தனை பாடசாலை அணிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காத திறமைவாய்ந்த அணிகளாக காணப்பட்டன. சிறந்த ஆரோக்கியமன பல விவாதங்கள் இடம் பெற்றதையும் காணக் கூடியதாக இருந்தது.
மன்னார் மாவட்த்தில் விவாத ரீதியிலான பயிற்சிகளை மிக விரைவில் தமிழ் மாமன்றம்,பல பாடசாலைகளின் வேண்டுகோளிற்கிணங்க செய்யவிருக்கின்றது. அத்துடன் வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில், தமிழ்த் தினப் போட்டிகளிற்கான பயிற்சிகளை அளிக்கவும் தமிழ் மாமன்றம் முன்வந்துள்ளது.


மன்னார் – வவுனியா மாவட்டங்களுக்கிடையிலான ‘மொழிமுனை போட்டி 2014′ Reviewed by Author on February 25, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.