அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தனியார் போக்குவரத்து தரிப்பு நிலையத்தின் அபிவிருத்திபணிகள் மன்னார் நகர சபையினால் முன்னெடுக்கப்பு -படங்கள்

மன்னார் தனியார் போக்குவரத்து தரிப்பு நிலையத்தின் அபிவிருத்திபணிகள் மன்னார் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

தனியார் பேருந்து நிலையத்திற்கென ஒதுக்கப்பட்ட குறித்த பகுதியில் கடந்த காலங்களில் பல குறைபாடுகள் காணப்பட்டன.

இந்நிலையில் குறித்த குறைபாடுகளை படிப்படியாக நிவர்த்தி செய்வதற்கு மன்னார் நகரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் அடிப்படையில் பல அபிவிருத்தி பணிகள் இப்பகுதியில் மன்னார் நகரசபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன்படி  முதற்கட்டமாக குறித்த பேருந்து நிலையத்தில் நவீன முறையிலான மலசலகூடம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்நிலையில் குறித்த தனியார் பேருந்து நிலையத்தில் பேருந்து தரித்து நிற்கும் பகுதிகள் மழைகாலங்களில் மிகமோசமான நிலையில் பாதிப்புக்குள்ளாகிவருவது வழமை.

இந்நிலையினை கருத்தில் எடுத்துக்கொண்ட மன்னார் நகரசபை குறித்த பகுதியில் பேருந்து தரித்து நிற்கும் பகுதியை சமப்படுத்தி கல்லால் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்மூலம் மழைகலாங்களில் ஏற்படக்கூடிய அசௌகரியங்களுக்கு பயணிகள் முகம்கொடுக்காதவாறு சிறந்த சேவையினை மக்களுக்கு வழங்குவதற்கு மன்னார் நகரசபை முன்வந்துள்ளது.

இதன்படி முதற்கட்டமாக குறித்த அபிவிருத்திபணிக்கென பத்து இலட்சம் ரூபாய்கள் செலவில் குறித்த பேருந்து தரிப்பிடத்தின்; தரை கற்களால் அமைக்கப்படவுள்ளது.

மன்னார் நகரசபை முன்னெடுத்து வரும் பல வேலைத்திட்டங்களின் மூலம் கிடைக்கப்பெற்ற நிதியிலிருந்து குறித்த அபிவிருத்தி பணிக்கெனசெலவிடப்பட்டுவருகிறது.

இது தொடர்பாக தெரிவித்த மன்னார் நகரசபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் மன்னார் நகரசபை அதன்  முதல்வரின் வழிநடத்தலின் ஊடாக மிக சிறந்த முறையில் பல தடைகளையும் தாண்டி சிறப்பாக செயற்ப்பட்டு வருகிறது.

இதற்கு உறுதுனையாக நகரசபையின் உபதலைவர், நகரசபையின் செயலாளர் உள்ளிட்ட நகரசபை உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் ஏகோபித்த ஒத்துளைப்பினை வழங்கி வருகின்றனர் என தெரிவித்த அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் நகரசபையின் நடவடிக்கைகள் ஊடாக பெறப்படும் நிதியினை சரியான முறையில் நகரசபை கையாளுவதோடு
எப்பகுதிக்கு என்னதேவை என்பதை அடையாளம் கண்டு குறித்த அடையாளம் காணப்பட்ட விடயத்தில் கரிசனையுடன் செயற்படுவதோடு இனிவரும் காலங்களில் இதுபோன்று பல அபிவிருத்தி பணிகளை மன்னார் நகரசபை முன்னெடுக்கும் என்று தெரிவித்தார்.




மன்னார் தனியார் போக்குவரத்து தரிப்பு நிலையத்தின் அபிவிருத்திபணிகள் மன்னார் நகர சபையினால் முன்னெடுக்கப்பு -படங்கள் Reviewed by Author on February 05, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.