இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்ற விசாரணை தேவையற்றது ; ரஷ்யா
இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்ற விசாரணை ஒன்றை நடத்துவதை அனுமதிக்க முடியாது என ரஷ்யாவின் மனிதாபிமான ஒருங்கிணைப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் அனடொலி விக்டோரோவ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலும், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் விசாரணை நடத்துமாறு சர்வதேச நாடுகள் சில கோரி வருகின்றன. அத்துடன் இந்த விடயத்தை முன்வைத்து சிறிலங்காவிற்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று கோரப்படுகிறது.
ஆனால் அவ்வாறு பொருளாதார தடை விதிப்பதாலும், விசாரணை மேற்கொள்ளப்படுவதாலும், சிறிலங்காவில் உள்ள பொது மக்களே அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கை மீளமைப்பு செய்துள்ள விதம் தொடர்பில் தாம் திருப்தி அடைவதாகவும், சிறிலங்காவிற்கு எதிராக இவ்வாறான விசாரணை ஒன்று அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Reviewed by Author
on
February 21, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment