அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவிக்கும் வதிவிட பயிற்ச்சி பட்டறை --படங்கள்

ஆசிரியர்களான  ஆங்கில பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவிக்கும்  5 நாள் வதிவிட பயிற்ச்சி செயலமர்வு இன்று மன்னார் ஆங்கில உதவி மையத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த செயலமர்வு வட மாகாண ஆங்கில உதவி மையத்தின் முகாமையாளர் எஸ்.ஏ.ராஜன் குரூஸ் தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது
குறித்த செயலமர்வில் மன்னார் கல்வி வலயம் மற்றும் மடு கல்வி வலயத்தை சேர்ந்த 25 ஆங்கில ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்படவுள்ளனர்.
 பாராளமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அவர்களின் தருணட்ட கெட்ட அமைப்பு மற்றும்  பிரித்தானியாவின் ஸ்பைஸ் (SPICE)  நிறுவனமும் இணைந்து குறித்த பயிற்ச்சி செயலமர்வினை ஒழுங்கு செய்துள்ளது.

கல்வி திணைக்களத்தின் அனுசரனையுடன் நடைபெறும் குறித்த செயலமர்விற்கென வளவாளராக பிரித்தானியாவின் கலாநிதி அலிஸ்டர் பிரடி கலந்துகொண்டு ஆங்கில ஆசிரியர்களுக்கான பயிற்ச்சியினை வழங்கவுள்ளார்

குறித்த 5 நாளுக்கான பயிற்சி செயலமர்வு இன்று ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 28ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

குறித்த ஆரம்ப நிகழ்வில் ஸ்பைஸ் நிறுவனத்தின் முகாமையாளர் முகான் சமரசிங்க மற்றும் மன்னார் கல்வி பணிப்பாளர் எம்.எம்.சியான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







மன்னாரில் பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவிக்கும் வதிவிட பயிற்ச்சி பட்டறை --படங்கள் Reviewed by Author on February 24, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.