அண்மைய செய்திகள்

recent
-

இரணை இலுப்பைக்குளத்து தமிழ் - முஸ்லிம் மக்களே அமைதி காருங்கள் என்கிறார் வடக்கு மாகாணபோக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன்.....

கடந்த வாரம் இரணை இலுப்பைக்குளத்தில் உள்ள எனது கட்டவுட் மீது கறுப்பு பெயிண்ட் பூசியது மட்டுமல்லாதுஅதனை மேற்கொண்டது இஸ்லாமிய நபர்கள்தான் என்பதனை தமிழ் மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக  'மீண்டும்றிசாட் வருவான் அச்சமில்லை எதிர்பாருங்கள்' என்று

எழுதப்பட்டுள்ள துண்டுப்பிரசுரமும் ஒட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில் ஏனைய பிரதேசங்களை விட மிகவும் கஷ்டப் பிரதேசங்களாகஇருப்பவைகளில் இரணை இலுப்பைக்குளம்இ கல் மடுஇ காக்கயங்குளம்இ பூசாரி நகர்இ மண் கிண்டிஇ விளாத்திக்குளம்இபரசங்குளம்இ வலயன்கட்டு போன்ற கிராமங்களாகும் இதனைக் கருத்திற் கொண்டே இப்பிரதேசங்களை அபிவிருத்திசெய்ய வேண்டும் என்பதற்காக அங்குள்ள பாடசாலையினை தரம் 9 இல் இருந்து சாதாரண தரம் (ழுஃடு ) வரைதரமுயர்த்துவதர்க்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதும்இ நீண்டகாலமாக வைத்தியர் இல்லாது காணப்பட்டவைத்தியசாலைக்கு வைத்தியரை நியமிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் அதன் விளைவாக தற்போது அங்கு  வைத்தியர் சேவையில் இருப்பதையும்  மேலும் இரணை இலுப்பைக்குளத்தில் இருக்கின்ற விளையாட்டுமைதானத்தை புனரமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் மற்றும் அங்குள்ள மக்களின்வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு மேற்கொள்ளப் படுகின்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும் எனது அப்பகுதிமக்கள் நன்கு அறிவார்கள்.

இவ்வாறான நடவடிக்கைகளால் அப்பகுதி  மக்கள் அதீத  அளவு என்னை நேசிப்பதையும் நான் நன்கு அறிவேன்.இன்னிலையில் மேற்ப்படி சமூக விரோதச் செயலினூடாக இரு இனங்களுக்கிடையில் முறுகல் நிலையினைதோற்றுவிக்கும் அளவிற்கு தீய செயலில் ஈடுபட்ட மற்றும் ஈடுபடுகின்ற காடையர்களை பொதுமக்கள் இனங்கண்டுபுத்தி சாதுரியமாக நடந்து கொள்ள வேண்டுமென்றும் பொதுமக்களிடம்  அன்பாகக் கேட்டுக்கொள்கின்றார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் மேற்ப்படி செயலில் ஈடுபட்டவர்கள் அமைச்சர் றிசாட் பதயுதீனின் ஆதரவாளர்களாக இருப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை என்றும் சம்பவ தினத்திற்கு முன்னைய தினம் ஒரு சில எமது அரசியல் வாதிகள்அங்கு சென்று வந்துள்ளதாகவும் தகவல் கிடைக்கப் பெற்றதாகவும்  தெரிவித்தார். எனவே மேற்ப்படி செயலானதுஅரசியல் இலாபம் கருதியும் எதிர் கால பாராளுமன்றத் தேர்தலைக் குறிவைத்தும் சுயலாபம் தேடும் நோக்கில்மேற்கொள்ளப்படுவது போன்று  தென்படுகின்றது. இவ்வாறு சந்தேகிப்பதற்க்கான சில ஆதாரப் பூர்வமானசாட்சியங்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும்இ இவற்றின் உண்மைத் தன்மையினை சரிவர ஆராய்ந்து குறித்த நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்இ எனவே பொதுமக்களை தயவுசெய்து அமைதி காக்குமாறுஅமைச்சர் அன்பாக கேட்டு நிற்கின்றார்.  

இரணை இலுப்பைக்குளத்து தமிழ் - முஸ்லிம் மக்களே அமைதி காருங்கள் என்கிறார் வடக்கு மாகாணபோக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன்..... Reviewed by Author on February 23, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.