இரண்டாம் இணைப்பு-மன்னிப்புக் கோரினார் அமைச்சர் ரிஷாட் பதியூதீன்- படங்கள் இணைப்பு
நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் நீதிமன்றத்திடமும், முன்னாள் மன்னார் நீதவானிடமும் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மன்னிப்பு கோரியுள்ளார்.
அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்த மன்னிப்பு கோரலை அடுத்து அமைச்சர் மீதான வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன்னணி சட்டத்தரணிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
இன்று பி.பகல் 03.00 மணிக்கு அமைச்சர் றிசாத் பதியூதீன் அலுவலக இல்லத்தில் ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது.
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம் சுகையிர், என்.எம். சஹீட், சிறாஸ், கிசாஸ் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் இவ் ஊடகவியலாளர் மாநட்டில் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.
நீதித்துறைக்கு ஏதேனும் அகௌரவம் ஏற்பட்டிருப்பின் அதற்காகவும் மனவருந்துவதோடு, எனது அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புக்காகவேண்டி நீதித்துறையிடம் வருத்தத்தை தெரிவித்தேன்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நான் நீதிமன்றத்தை அவமதித்தாக எனக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு இன்று மேலதிக விசாரணை எதுவும் இன்றி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17,18ஆம் திகதிகளில் எனது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளகைத தொலைபேசியிலிருந்து என்னுடைய அனுமதியின்றி அதிகாரம் அளிக்கப்படாதவகையில் மன்னார் நீதிமன்ற நீதவான் ஜூட்டசன் அவர்களுக்கு தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டது சம்பந்தமாக நான் எனது மனவருத்தத்தை தெரிவித்ததோடு, நீதிமன்றத்தின் சுதந்திரத்தையும் கௌரவத்தையும் பேணுபவன் என்றவகையில் எனது அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புக்காக வேண்டி நீதித்துறையிடம் வருத்தத்தை தெரிவித்தேன் என்றார்.
இரண்டாம் இணைப்பு-மன்னிப்புக் கோரினார் அமைச்சர் ரிஷாட் பதியூதீன்- படங்கள் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
March 14, 2014
Rating:

No comments:
Post a Comment