மன்-அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையின் வணிக மன்றத்தினால் வணிகத்தேடல் நூ வெளியீட்டு விழா
மன்னார்-அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையின் வணிக மன்றத்தினால் தயாரிக்கப்பட்ட ‘பஹதுத் திஜாரா’ (வணிகத்தேடல்) நூழ் வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை காலை பாடசாலையின் ஒன்று கூடல் மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் எம்.வை.மாஹீர் தலைமையில் இடம் பெற்றது.
-குறித்த நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான்,கௌரவ விருந்தினர்களாக மன்னார் ஹட்டன் நெசனல் வங்கி முகாமையாளர் ராம் கல்யான்,இலங்கை சேமிப்பு வங்கியின் மன்னார் கிளை கடன் உததியோகத்தர் லோறன்ஸ் மொன்வோட்,மன்னார் வலயக்கல்விப்பணிமனையின் வர்த்தக பாட ஆசிரியர் ஆலோசகர் ரி.ஏ.கொடுதோர்,மன்னார் நகர சபை உறுப்பினர் என.நகுசீன் உற்பட பாடசாலை ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
-இதன் போது குறித்த நூலை மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான் வெளியீடு செய்தார்.
-இதன் போது பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மன்-அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையின் வணிக மன்றத்தினால் வணிகத்தேடல் நூ வெளியீட்டு விழா
Reviewed by NEWMANNAR
on
March 20, 2014
Rating:

No comments:
Post a Comment