2ம் இணைப்பு -"தழல் இலக்கிய வட்டத்தின் முழுமதி தின இலக்கிய நிகழ்வாக “மகளிர் தின நிகழ்வு”
"தழல் இலக்கிய வட்டத்தின் முழுமதி தின இலக்கிய நிகழ்வாக “மகளிர் தின நிகழ்வு” நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கலைஅருவி மண்டபத்தில் நடைபெறும்.
திருமதி.பெப்பி விக்டர் லெம்பர்ட் (தமிழ் -உதவிக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்வி பணிமனை, மன்னார்) அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் செல்வி.கோதை பரதலோஜினி, எழுத்தாளர் வெற்றிச்செல்வி, திருமதி.சுஜானா அப்துல் ரகுமான் ஆகியோரின் சிறப்புரையும், மாணவ மாணவிகளின் கவியரங்கம், கிராமிய நடனம், இசை ஆசிரியை செல்வி.ஜெயசீலியின் மாணவிகளின் வாய்ப்பாட்டு மற்றும் யாழ் பல்கலைக்கழக வருகை விரிவுரையாளர் ம.ந.கடம்பேஸ்வரனின் இலக்கண நூல் பற்றிய பார்வை ஆகியவை சிறப்பு நிகழ்வுகளாக இடம்பெற உள்ளன.
இந்நிகழ்வை எழுத்தாளர் வெற்றிச்செல்வியும், கவிஞர் சுஜானா அப்துல் ரகுமான் அவர்களும் நெறிப்படுத்துவார்கள்.
இந்நிகழ்விற்கான ஊடக அனுசரணையினை மன்னார் இணையம்
வழங்குகின்றது
இந்நிகழ்விற்கான ஊடக அனுசரணையினை மன்னார் இணையம்
வழங்குகின்றது
2ம் இணைப்பு -"தழல் இலக்கிய வட்டத்தின் முழுமதி தின இலக்கிய நிகழ்வாக “மகளிர் தின நிகழ்வு”
Reviewed by NEWMANNAR
on
March 15, 2014
Rating:

No comments:
Post a Comment