யாழில் இரு பாடசாலை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மோதல்; ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் இரண்டு பாடசாலை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின்போது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் இரண்டு பிரபல பாடசாலைகளுக்கு இடையில் இன்று ஒருநாள் கிரிகெட் போட்டி இடம்பெற்ற சந்தர்ப்த்தில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது
இதன்போது உயிரிழந்தவர் குறித்த கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றிய பாடசாலை ஒன்றின் பழைய மாணவர் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் சேசாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யாழில் இரு பாடசாலை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மோதல்; ஒருவர் உயிரிழப்பு
Reviewed by NEWMANNAR
on
March 15, 2014
Rating:

No comments:
Post a Comment