மூக்கின் மூலம் அதிவேக டைப்பிங்; இந்திய இளைஞன் சாதனை (Video)
மனித உடலின் மூக்கு பொதுவாக அனைவருக்கும் சுவாசிப்பதற்கும், வாசனைகளை நுகர்வதற்கும் பயன்படும். எனினும் மொஹமட் குர்சித் ஹூசெய்ன் மூக்கினை பயன்படுத்தி கணணி விசைப்பலகையை இயக்குவதற்கு தன்னை பழக்கப்படுத்திக் கொண்டுள்ளார்.
மூக்கின் மூலம் வேகமாக டைப் செய்யும் உலகின் முதலாவது நபர் என்ற பெருமையை 23 வயதான ஹூசெய்ன் தனதாக்கிக் கொண்டுள்ளார்.
தனது தலையை வேகமாக வலப்புறமாகவும் இடப்புறமாகவும் நகர்த்தி மூக்கின் மூலம் இவர் டைப்பிங் செய்கின்றார்.
“Guinness World Records have challenged me to type this sentence using my nose in the fastest time” என்ற சொற் தொடரை டைப் செய்வதற்கு 47.44 செக்கன்களை அவர் எடுத்துள்ளார்.
இதன் மூலம் ஏற்கனவே இருந்த 45 செக்கன்கள் என்ற உலக சாதனையை இவர் முறியடித்துள்ளார்.
இந்த சாதனை கின்னஸ் குழுவினரால் உறுதிப்படுத்தப்பட்டு சாதனை பட்டியலில் இணைக்கப்படும்.
2012 ஆம் ஆண்டு மொஹமட் குர்சித் ஹூசெய்ன் ஆங்கில அகரவரிசையில் உள்ள 26 எழுத்துக்களை வெறுமனே 3.43 செக்கன்களில் தனது கைகளை பயன்படுத்தி டைப் செய்து சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
காணொளி பார்க்க
காணொளி பார்க்க
மூக்கின் மூலம் அதிவேக டைப்பிங்; இந்திய இளைஞன் சாதனை (Video)
Reviewed by NEWMANNAR
on
March 06, 2014
Rating:

No comments:
Post a Comment