சிகரெட்டைக் கொண்டு கட்டடத்திற்கு தீ வைத்தது பறவை!
லண்டனின் தென் பகுதியில் உள்ள கட்டடமொன்றில் தீ பரவியமைக்கு பறவை ஒன்றே காரணம் என கூறப்படுகிறது.
எரிந்துகொண்டிருந்த சிகரெட் ஒன்றைக் காவிக்கொண்டு அப்பறவையானது, குறித்த கட்டடத்தின் கூரைப் பகுதியிலிருந்த தனது கூட்டிற்குச் சென்றுள்ளது.
பறவையின் கூடு தீப்பற்றியதைத் தொடர்ந்து கட்டடத்தின் கூரைப் பகுதியிலும் தீ பரவியுள்ளதாக தாம் நம்புவதாக தீயணைப்புத்துறை விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அந்தப் பகுதியில் மின் ஒழுக்கு ஏற்படுவதற்கான எவ்வித சாத்தியக்கூறுகளும் அமைந்திருக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின் போது, பறவையின் கூட்டிற்கு அருகில் சிகரெட் துண்டொன்று கிடப்பதைக் கண்ட அதிகாரிகள், தீ பற்றியமைக்கு பறவை தான் காரணமென்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
கட்டடத்தின் ஐந்தாவது மாடியிலுள்ள கூரைப் பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் 9 பேர் அங்கிருந்து வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமது மாடிக்கு அடிக்கடி வந்து போகும் பறவையைத் தாங்கள் பார்த்திருப்பதாக குறித்த கட்டடத்தின் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிகரெட்டைக் கொண்டு கட்டடத்திற்கு தீ வைத்தது பறவை!
Reviewed by NEWMANNAR
on
March 06, 2014
Rating:

No comments:
Post a Comment