கர்ப்பிணி பெண்ணை கொலை செய்த தாய்- படங்கள்
காதல் திருமணம் செய்த குற்றத்திற்காக கர்ப்பிணி பெண்னை பெற்ற தாயே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் அருகே உள்ள உச்சிப்புளியை சேர்ந்த ராஜகோபால் மகள் வைதேகிக்கும் பக்கத்து வீட்டில் வசித்து வந்த சுரேஷ்குமாருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில் கடந்த ஆண்டு மதுரைக்கு சென்று அங்கு பதிவு திருமணம் செய்து கொண்டதுடன் அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர்.
இதனைத் தொடர்ந்து வைதேகியின் பெற்றோர் தங்களுக்கும், வைதேகிக்கும் எந்த உறவும் இல்லை என காவல் நிலையத்தில் எழுதி கொடுத்துவிட்டனர்.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து இருவரும் கேரளாவிற்கு சென்று தங்களது இல்லற வாழ்க்கையை நல்லறமாய் ஆரம்பித்தனர். சுரேஷ்குமார் அங்கு கட்டட வேலை பார்த்து வந்த நிலையில், வைதேகி கர்ப்பமானார்.
இத்தகவலை அறிந்த வைதேகியின் தாய் வெங்கடேஷ்வரி வைதேகியை ஏற்று கொள்வதாகவும், உடனடியாக ஊருக்கு வருமாறும் தொலைபேசியில் அழைத்துள்ளார்.
தாயின் ஆசை வார்த்தையை நம்பிய வைதேகி தனது கணவருடன் தேனி அருகே உள்ள வீரபாண்டிக்கு சென்றுள்ளார். அங்கு வந்த வெங்கடேஷ்வரி, வைதேகியை மட்டும் தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.
வைதேகி தனது தாயின் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த வெங்கடேஷ்வரியின் தம்பி பாக்யராஜ் வைதேகியை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இரண்டு கொலையாட்களுடை தயார் செய்து அவர்களின் உதவியுடன் வைதேகியை கொலை செய்து விட்டு அவரது உடலை சாக்குமூட்டையில் கட்டி வைகை ஆற்று கரையில் புதைத்து விட்டார்.
இந்நிலையில், தனது மனைவி வைதேகியை காணவில்லை எனவும், அவரை கண்டுபிடித்து தருமாறும் சுரேஷ்குமார், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் வைதேகி கௌரவ கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இக்குற்றத்திற்காக வைதேகியின் தாய் வெங்கடேஷ்வரி, தாய் மாமன்கள் பாக்யராஜ், ஜானிகிராமன், தம்பி விமல்ராஜ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
இது தவிர தலைமறைவான கொலையாளிகள் ரவீந்திரன், தர்மராஜன், உள்ளிட்ட மேலும் சிலரை கேணிக்கரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கர்ப்பிணி பெண்ணை கொலை செய்த தாய்- படங்கள்
Reviewed by NEWMANNAR
on
March 31, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment