அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா, முல்லைத்தீவில் நன்னீர் மீன் வளர்ப்பை ஊக்குவிக்க நடவடிக்கை

வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நன்னீர் மீன் வளர்ப்பை ஊக்குவிப்பதற்கு கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன்பொருட்டு வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள விவசாயத்திற்கு பயன்படுத்தப்படாத குளங்களை புனரமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா, கனகராயன் குளம் மற்றும் வவுனிகுளம் பகுதிகளில் நன்னீர் மீன் பிடிப்பவர்களுக்கான ஓய்வு மண்டபங்களை பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது மீனவர்களுக்கான மீன்பிடி ஓடங்களும் அமைச்சரினால் கையளிக்கப்பட்டுள்ளன.
வவுனியா, முல்லைத்தீவில் நன்னீர் மீன் வளர்ப்பை ஊக்குவிக்க நடவடிக்கை Reviewed by NEWMANNAR on March 06, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.