அண்மைய செய்திகள்

recent
-

400 கோடி ரூபாய் வானூர்தி தொழினுட்பத்தைக் கண்டு பிடித்த இலங்கைத் தமிழன்

400 கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் வானூர்தி நிறுவனங்கள் சேமிக்க உதவும் தொழினுட்பத்தைக் கண்டறிந்தவர், தென்மராட்சி இளைஞர். முனைவர் சிதம்பரநாதன் சபேசன். அன்னாரை உலகம் இன்று வியந்து பாராட்டுகிறது. 

1984இல் பிறந்த இவர். 2003 12ஆம் ஆண்டுத் தேர்வுக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படித்தவர். அதற்குமுன்பு சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் படித்தவர். மொரட்டுவைப் பல்கலைக் கழகத்தில் பொறியியலாளராக முதலாண்டு படிக்கையிலேயே புலமைப் பரிசில் பெற்று பிரித்தானியா சென்றார். செபீல்டு பல்கலையில் மின்னணுப் பொறியியல் பட்டதாரியானார். 2007இல் பிரித்தானியாவின் மிகச் சிறந்த அறிவியல் மாணவர்கள் 18 பேரில் ஒருவராகிப் பதக்கம் பெற்றார்.

 கேம்பிரிட்சுப் பல்கலையில் முதுநிலை அறிவியல் பட்டம் பின்னர் முனவர் பட்டம் பெற்றார். கடந்த ஆண்டு தென்மராட்சியைச் சோந்த சிவநாதனை அதியுயர் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு ஒன்றிற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா அழைத்துப் பாராட்டினார். இந்த ஆண்டு அதேபோல சபேசனைப் பிரித்தானியா பாராட்டுகிறது.


400 கோடி ரூபாய் வானூர்தி தொழினுட்பத்தைக் கண்டு பிடித்த இலங்கைத் தமிழன் Reviewed by NEWMANNAR on March 13, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.