ஜெனிவாவில் இந்தியா செய்தது துரோகம் :மன்னார் ஆயர்
இந்தியா ஜெனிவாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்காமல் நடுநிலை வகித்தமை ஈழத்தமிழர்களுக்குச் செய்த மாபெரும் துரோகம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்டப் போரில் இலங்கை அரசுக்கு உதவியாக தமிழினப் படுகொலைக்கு இந்திய அரசு உறுதுணையாக இருந்தது. இது சர்வதேச சமூகம் அறிந்த உண்மை.
எனவே போர்க்குற்றம் தொடர்பில் இலங்கைக்கு எதிராக ஐ.நா. விசாரணை மேற்கொள்ளப்படும் போது தாமும் சிக்க வேண்டி ஏற்படும் என்ற காரணத்தினாலேயே வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது.
எனவே இனியாவது இந்தியா ஈழத் தமிழர்களுக்கு துரோகங்களைச் செய்யாமல் ஐ.நாவுடன் சேர்ந்து எமக்காகப் பணியாற்றவேண்டும். எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் இந்தியா செய்தது துரோகம் :மன்னார் ஆயர்
Reviewed by NEWMANNAR
on
March 31, 2014
Rating:

No comments:
Post a Comment