அண்மைய செய்திகள்

recent
-

பிரதேச செயலக உதைப்பந்தாட்டப் போட்டிக்கு சிங்கள நடுவர்கள் - மன்னார் மாவட்ட லீக் கண்டனம்!

மன்னார்பிரதேச செயலக மட்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு அநுராதபுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட சிங்கள நடுவர்களைக் கொண்டு குறித்த போட்டி நடாத்தப்பட்டமைக்கு மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் தமது வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது.

மன்னார் பிரதேச செயலாளரும் மாவட்ட உதைப்பந்தாட்ட பயிற்சியாளரும் இனைந்தே இதனை செய்துள்ளதாக லீக் குற்றம் சாட்டியுள்ளது.இது தொடர்பாக மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்

மன்னார் பிரதேச செயலக மட்ட கழகங்கழுக்கிடையிலான உதைப்பந்தாட்டப்போட்டி கடந்த சனிஇஞாயிறு ஆகிய இரு தினங்கள் மன்னார் பொது விளையாட்டரங்கில் நடைபெற்றது. இப்போட்டியை மன்னார் உதைப்பந்தாட்ட லீக்கை நடாத்தி தருமாறு உதவிப்பிரதேச செயலாளர் மற்றும் விளையாட்டு அதிகாரி எம்மிடம் கோரினர்.

 இதற்கான ஒழுங்குகளை நாம் மேற்கொண்ட நிலையில் கச்சேரியை சேர்ந்த விளையாட்டு அதிகாரிகள் தங்களின் சுய லாபத்திற்காக அதை தடுத்து நிறுத்தி சிங்கள நடுவர்களைக்கொண்டு வந்துள்ள போட்டியை நடாத்தியுள்ளனர்.

இவ்விடையம் தவறு எனவும்இ மாவட்ட நடுவர்களைப் பயன்படுத்துமாறு கழகங்கள் கோரிய வேளை அக்கழகங்களை உதாசீனப்படுத்தி அவ்வாறு கதைத்தால் 5 வருடங்கள் போட்டிகளை இடைநிறுத்துவோம் எனவும் அச்சுறுத்தியுள்ளனர். அவ்வாறான  அச்சுறுத்தலுக்கு பயந்தே கழகங்கள் விளையாட சம்மதித்தன. ஆனால் கிறீன்ட பீல்ட் கழகம் அதையும் தாண்டி போட்டியில் பங்கு பற்றாது தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளது. என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதேச செயலக உதைப்பந்தாட்டப் போட்டிக்கு சிங்கள நடுவர்கள் - மன்னார் மாவட்ட லீக் கண்டனம்! Reviewed by NEWMANNAR on March 31, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.