மன்னாரில் எதிர்வரும் 21 ஆம் திகதி பொது விளையாட்டு மைதானத்தில்உண்ணாவிரதப் போராட்டம்
மன்னார் மாவட்ட மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தமிழ் மக்களின் அபிலாசைகளை சர்வதேசத்திற்கு எடுத்துக் காட்டும் முகமாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள உண்ணாவிரதப்போராட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெறவுள்ளது.
இது தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் ஒன்று இன்று வியாழக்கிழமை (13-03-2014) காலை மன்னார் ஆகாஸ் விடுதியில் இடம் பெற்றது.
இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம்,வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை மற்றும் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போதே எதிர் வரும் 21 ஆம் திகதி மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் குறித்த உண்ணாவிரதப்போராட்டம் மேற்கொள்ளப்படுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
-மன்னார் மாவட்டத்தில் காணமல் போனவர்கள் தொடர்பான விசாரனை,மன்னார் மனித புதை குழி தொடர்பில் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும், மீனவர்கள், விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகள், தமிழ் மக்களுக்கு இந்திய வீட்டுத்திட்டத்தில் இழைக்கப்பட்டுள்ள அநீதிகள் தொடர்பில் நீதி கோரியே குறித்த உண்ணாவிரதப்போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிய வருகின்றது.
மன்னாரில் எதிர்வரும் 21 ஆம் திகதி பொது விளையாட்டு மைதானத்தில்உண்ணாவிரதப் போராட்டம்
Reviewed by NEWMANNAR
on
March 13, 2014
Rating:

No comments:
Post a Comment