தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
யாழ்.திருநெல்வேலி பகுதியில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பாரதிபுரத்தை சேர்ந்த சண்முகலிங்கம் மனோகரன் (வயது 25) என்னும் இளைஞனே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளைளுக்காக சடலம் தற்போது யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இன்றைய தினம் சடலாமாக மீட்கப்பட்டவரின் சகோதரர் ஒருவர் கடந்த வருடம் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Reviewed by NEWMANNAR
on
March 24, 2014
Rating:

No comments:
Post a Comment