வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக விஜயலக்சுமி வழக்கு
வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக பிரதம செயலாளர் விஜயலக்சுமி உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு பதிவுசெய்துள்ளார்.
இந்த தகவலை வட மாகாணத்திலுள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகளுக்கான அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போது முதலமைச்சர் தெரிவித்தார்.
தன்னுடைய அதிகாரங்களை வட மாகாண முதலமைச்சர் குறைத்து விட்டதாகவும் தனது அதிகாரங்கள் குறைக்கப்பட்டதால் மாகாண சபையில் உண்மையான தனது உரிமைகளை இழந்துள்ளதாகவும் பிரதம செயலாளர் வழக்கு பதிவுசெய்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த முதலமைச்சர் அவ்வாறு அவர் வழக்கு பதிவு செய்துள்ளதும் தனக்கு ஒரு வகையில் நன்மைதான் என தெரிவித்தார்.
இவ்வாறு பிரதம செயலாளரைப் போன்று தனக்கு (முதலமைச்சர்) எதிராக செயற்படுபவர்களால் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய சாத்தியங்கள் அதிகரித்துள்ளது.
மேலும் இந்த வழக்கானது 13 ஆவது திருத்தச் சட்டத்தில் ஆளுநர், பிரதம செயலாளர் மற்றும் மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் எவை என்பதை நீதிமன்றத்தினூடாக அனைவரும் அறிவதற்கு சிறந்த சந்தர்ப்பமாக அமைந்துள்ளது என முதலமைச்சர் தெரிவித்தார்.
வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக விஜயலக்சுமி வழக்கு
Reviewed by NEWMANNAR
on
March 19, 2014
Rating:

No comments:
Post a Comment