அண்மைய செய்திகள்

recent
-

பாடசாலை மாணவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு 40 வருட கடூழிய சிறை

பாடசாலை மாணவன் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவருக்கு, அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தினால் இன்று 40 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

 முறைப்பாட்டாளர் தரப்பு சிறுவனுக்கு, ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு செலுத்துமாறும் மேல்நீதிமன்ற நீதிபதி பிரேமா சுவர்ணாதிபதி பிரதிவாதிக்கு உத்தரவிட்டுள்ளார். 

 இழப்பீட்டை செலுத்துவதற்குத் தவறும் பட்சத்தில், பிரதிவாதிக்கு மேலும் 02 வருடத்திற்கு சிறைத்தண்டனை நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பனே பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளைஞனுக்கே இவ்வாறு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

 2008 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த தினமொன்றில் இந்த நபரினால் மாணவன் ஒருவன் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு தாக்கல்செய்யப்பட்டிருந்தது.
பாடசாலை மாணவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு 40 வருட கடூழிய சிறை Reviewed by NEWMANNAR on March 04, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.