மலேசிய விமானம் விபத்துக்குள்ளாகியிருக்க வாய்ப்பில்லை; சவால் விடும் ஜெய்சன் கிஸ்னர் (Video)
காணாமல் போன MH370 விமானம் இந்து சமுத்திரத்தில் விபத்துக்குள்ளானதாக மலேசியா வெளியிட்ட கருத்துக்கு, அமெரிக்க குற்றவியல் ஆய்வாளர் கலாநிதி ஜெய்சன் கிஸ்னர் சவால் விடுத்துள்ளார்.
இலத்திரனியல் பாகமொன்றினால் விமானத்தின் கட்டமைப்பிற்கு பாதிப்பு விளைவிக்கப்பட்டமையை எவரும் மறுக்க முடியாது என நியூஸ்பெஸ்ட்டிற்கு அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமானத்தின் பயணப் பாதை மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட கிஸ்னர், விபத்துக்குள்ளானமைக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லாமையினால் அது விபத்தென குறிப்பிட முடியாதெனவும் குற்றவியல் ஆய்வாளர் கூறினார்.
சில சந்தர்ப்பங்களில் விமானம் வெறெங்கேனும் தரையிறக்கப்பட்டிருக்கலாம் எனவும் அமெரிக்க குற்றவியல் ஆய்வாளர் கலாநிதி ஜெய்சன் கிஸ்னர் தெரிவித்துள்ளார்.
மலேசிய விமானம் விபத்துக்குள்ளாகியிருக்க வாய்ப்பில்லை; சவால் விடும் ஜெய்சன் கிஸ்னர் (Video)
Reviewed by NEWMANNAR
on
March 26, 2014
Rating:

No comments:
Post a Comment