அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் பாவனைக்கு உதவாத உணவுகள் அழிப்பு

மன்னார் நகரப்பகுதியில் அமைந்துள்ள விற்பனை நிலையங்களில் நுகர்வோர் விவகார அதிகார சபை உத்தியோகஸ்தர்கள் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த வியாபாரிகளை இனங்கண்டு இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 இதன் போது  நேற்று முன்தினம் மன்னார் நீதவான் நீதிமன்றில் 14 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் மன்றில் ஆஜர் படுத்தப்பட்டு  இவர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் கைப்பற்றப்பட்ட பொருட்களை அழிக்குமாறும் நீதி மன்றினால் உத்தரவிடப்பட்டது. 

 இதில் மன்னார் நகரப்பகுதியில் இயங்கும் அரச திணைக்களம் ஒன்றும் அடங்கும். காலவதியான உணவுப் பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டிலேயே இத்திணைக்களத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


மன்னாரில் நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் பாவனைக்கு உதவாத உணவுகள் அழிப்பு Reviewed by NEWMANNAR on March 27, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.