மன்னார் இலுப்பக்கடவை பொலிசாரினால் கைது செய்யப்பட்ட அனுமதியின்றி மணல் ஏற்றியவருக்கு தண்டப்பணம் அறவீடு
அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் ஆறு சந்தேகநபர்கள் மன்னார் இலுப்பக்கடவை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு நேற்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில ஆஜர் படுத்தப்பட்டனர்.
இதன் போது குறித்த சந்தேக நபர்கள் தம்மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து ரூபா தலா 15 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
அத்துடன் மணல் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் ரூபா 15 லட்சம் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் வாகன விசாரனைக்காக வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் இலுப்பக்கடவை பொலிசாரினால் கைது செய்யப்பட்ட அனுமதியின்றி மணல் ஏற்றியவருக்கு தண்டப்பணம் அறவீடு
Reviewed by NEWMANNAR
on
March 27, 2014
Rating:

No comments:
Post a Comment