திருமண விளம்பரங்களை தொடர்புகொண்டு தங்க நகைகள் கொள்ளை
பத்திரிகைகளில் பிரசுரமாகின்ற திருமண யோசனைகளுக்கான விளம்பரங்களுக்கு உரியவர்களுடன் தொடர்புகொண்டு, அவர்களின் தங்க நகைகளை கொள்ளையிடும் தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண வடக்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமண யோசனை பிரசுரித்தவர்களின் வீடுகளுக்கு சென்று, சுபகாரியத்திற்கு முன்னதாக சாந்தி கர்மம் நிறைவேற்ற வேண்டியிருப்பதாகக்கூறி தங்காபரணங்களை கொள்ளையிட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் அனுராதபுரம் சேனபுர பகுதியைச் சேர்ந்த ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்
திருமண விளம்பரங்களை தொடர்புகொண்டு தங்க நகைகள் கொள்ளை
Reviewed by NEWMANNAR
on
March 07, 2014
Rating:

No comments:
Post a Comment