பெல்மோரல் தமிழ் வித்தியாலய அதிபர் சடலமாக மீட்பு
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மன்றாசி தோட்டத்தின் தேயிலை மலைப்பகுதியில் இருந்து பெல்மோரல் தமிழ் வித்தியாலய அதிபர் சடலமொன்றை அக்கரப்பத்தனை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பெரிய நாகவத்தை தோட்டத்தை சேர்ந்த 40 வயது மதிக்கதக்க 3 பிள்ளைகளின் தந்தையான சந்திரசேகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் இன்றுக்காலை தனது வீட்டில் இருந்து பாடசாலைக்கு கடமைக்காக சென்றுள்ளதாக தெரிய வருவதுடன் இவர் நச்சருந்தி இறந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
சடலம் நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பெல்மோரல் தமிழ் வித்தியாலய அதிபர் சடலமாக மீட்பு
Reviewed by NEWMANNAR
on
March 20, 2014
Rating:

No comments:
Post a Comment