வட மாகாணத்தைப் போன்று மேல் மாகாணத்திலும் வாக்களிப்போம். பா.டெனிஸ்வரன்.
வரவிருக்கும் மேல் மாகாணசபைத் தேர்தலை தமிழ் பேசும் மக்களாகிய நாங்கள் புத்திசாதுரியமாக முகம் கொடுக்க வேண்டியுள்ளது. ஏனெனில் மேல் மாகாணத்தில் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க கூடிய ஒரே ஒரு சக்தியாக திகழ்பவர்கள் ஜனநாயக மக்கள் முன்னணியினர்.
அந்தவகையில் இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக மக்கள் முன்னணிக்கட்சியினை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
எனவே மக்கள் அனைவரும் ஒரே அணியில் ஒன்று திரண்டு வாக்களிக்குமாறு வடமாகாண சபை போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் வேண்டு கோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று(24) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
இக் கட்சியின் தலைவர் மனோகனேசன் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர். அவரது கரங்களை பலப்படுத்துவதோடு அவரோடு இணைந்து செயற்படும் நண்பன் குகவரதன் மற்றும் கட்சியின் வேட்பாளர்களின் வெற்றியையும் உறுதி செய்து மேல்மாகாணத்தில் புதுயுகம் படைக்க தமிழ் மக்கள் தீர்மானம் எடுக்கவேண்டும்.
தேர்தலில் தமது ஒற்றுமையை முழு உலகிற்குமே பறை சாற்றியுள்ளனர்.
உலகமே எமது தமிழ் மக்களை திரும்பிப்பார்க்கும் நிலைமையை உருவாக்கியுள்ளனர்.
அதே போன்று மேல் மாகாணத்திலும் தமிழனின் பாதுகாவலனாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகனேசனை வெற்றிபெறச் செய்வதோடு அவரது வலது கரமாக வலம் வரும்; குகவரதனை வெற்றிபெறச் செய்யுங்கள்.
மன்னார் புனிதசவேரியார் கல்லூரியில் என்னோடு கல்வி கற்ற குகவரதன் பல கஷ்டங்களுக்கு மத்தியில் கல்விகற்று இன்று பொறியியலாளராக உயர்ந்த நிலையில் வாழ்கிறார் என்றால்அது அவரது விடா முயற்சியாகும்.
வடமாகாணம் வரலாற்றுக்காலம் தொடக்கம்; கல்வியில் சிறப்புற்று விளங்கியது.
யுத்த காலத்திலும் சிரமங்களுக்கு மத்தியிலும் கல்வியை கைவிடவில்லை.
இன்று எமது சமூகம் இதனை சரிவரச் செய்ய வடமாகாண சபை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அது போன்று மேல் மாகாணத்தில் தமிழ் சமூகம் கல்வியில் பின்தங்கியுள்ளது.
அதனை நிவர்த்தி செய்து கல்விச் சமூகத்தை உருவாக்கும் திட்டங்கள் பல உள்ளன.
எனவே தமிழ் மக்கள் தமது அமோக வாக்குகளை ஜனநாயக மக்கள் முன்னணியினருக்கு வழங்கவேண்டும். அவர்களது வெற்றி மேல்மாகாணத்தின் புரட்சிகரமான மாற்றத்திற்கான வெற்றியாகும்.
வடக்கில் தமிழ் மக்கள் வெளிக்காட்டிய ஒற்றுமையை மேல் மாகாணத்திலும் வெளிக்காட்டுங்கள். துமிழின பாதுகாப்பை உறுதி செய்யுகள். ஊலகமே தமிழர்களை திரும்பிப்பார்க்கும் நிலைமையை ஏற்படுத்துங்கள் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட மாகாணத்தைப் போன்று மேல் மாகாணத்திலும் வாக்களிப்போம். பா.டெனிஸ்வரன்.
Reviewed by NEWMANNAR
on
March 24, 2014
Rating:

No comments:
Post a Comment